திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (06) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், இவ்வாண்டு நடை முறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாகக் கலந்துரையாடப்படவுள்ளன.