திருகோணமலை மாவட்டத்துக்கான சிவசேனைக் கூட்டம் கன்னியாவில் உள்ள தென் கயிலை ஆதீனத்தில் வண. அகத்தியர் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சுவாமிகளின் சீடன் கோடிசுவரன் ஐயா கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ ஜெனார்த்தனன் சமூக சமய சேவையாளர் தேவகடாட்சம் செந்தமிழ் அருட் சுனையர் ஜெகநாதன் , சுகாதார வைத்திய அதிகாரி Dr. விஜயகுமார், மருத்துவர் சம்பூர் சதீஸ்குமார் ,ஆலய தர்மகர்த்தாக்கள் இளம் சிவதொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்
சைவ அறப்பணி நிதியத்தை வெற்றிக்கரமாக அனைவர் மத்தியிலும் கொண்டு செல்லல் தொடர்பாக ஆராயப்பட்டது.
சைவப் பிரசாரகர் பயிற்சியை தென் கயிலை ஆதீனத்தில் ஆரம்பித்தல் தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது
அறநெறி பாடசாலைகளை வெற்றிகரமாக இயக்குதல் தொடர்பாக திட்டம் வரையப்பட்டது.
ஆவணக் காப்பகம் ஒன்றை ஆதீனத்தில் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
ஏழை மாணவர்களின் கல்வி விருத்தியில் உதவும் பொறிமுறைகள் நூல்கள் அப்பியாசக் கொப்பிகள் சேகரிக்கும் திட்டம் ஆராயப்பட்டது
திருகோணமலை சைவத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக முன்னுரிமைப் பட்டியல் தயாரித்து எதிர்காலத்தில் உபகுழுக்களை அமைத்து மாதாந்தம் ஆராய்வது என முடிவெடுக்கப்பட்டது