திருகோணமலை பொதுச்சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்ட பேரணி

திருகோணமலை நகரசபைக்கு சொந்தமான பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியபாரிகள் இன்று (4)பணிப்பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்ட பேரனி ஒன்றை நடாத்தினர். தமது வியாபார நிலையங்களக்கான அடிப்படை வசதிகளான குடிநீர் மின்சாரம் கதவு ஜன்னல் வசதிகள் மற்றும் மலசல கூடம் போன்றவை சீராகவும் சுகாதாரமாகவும் இல்லை . இந்த நிலையில் இருக்கும் போது தமது கடைகளுக்கான வருடாந்த வாடகை தொகையை அதிகரித்துக் கொண்டே செல்வதையும் வாடகையை செலுத்த சிறிது தாமதமானாலும் தண்டப்பணம் அதிகமாக வசூலிப்பதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்ட பேரனியை நடாத்தினார். திருகோணமலை நகர பொதுச்சந்தையில் ஆரம்பமான இந்த பேரனியானது நகரசபை வீதி வழியாக தபால் நிலைய வீதி , உட்துறைமுக வீதியால் உவர்மலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு சென்று அங்கு ஆளுனருக்கான மகஜர் ஒன்று கையளிப்பதற்காக சென்ற போதும் ஆளுனர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் ஆளுனரின் செயலாளரால் கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் அபயகுணவர்த்தன அவர்களிடம் இவ்விடயத்தை முறையிடுமாறு கேட்டக் கொண்டமைக்கு அமைய வியாபாரிகள் சங்கத்தின் குழு ஒன்று கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளரை சந்தித்தது தமது பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post