திருகோணமலை மடத்தடி பிரதான வீதியில் உள்ள ஈஸ்வரன் மோட்டஸ் கடையினை உடைத்து கடைக்குள் இருந்த 80000 ரூபாய் பணமும் 98000 ரூபாய் பொருட்களும் திருடப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த டிசம்பர் 1ம் திகதி இரவு இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக கடையின் உரிமையாளர் மகேஸ்வரன் சந்திரமோகன் இன்று 6ம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்ககையில் திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இந்த திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மேலும் தமது கடைக்கு முன் 24 மணிநேரம் பொலிசார் காவல் கடமையில் இருப்பது வழக்கம் மேலும் மிகவும் பிரதானமான நகரத்தின் மத்தியில் இந்த திருட்டு நடைபெற்றள்ளது.
மேலும் மோட்டார் சைக்கில் ஆட்டோ போன்றவற்றை அழகு படுத்தும் உரிதிப்பாகங்கள் விற்கப்படும் தமது கடையில் உள்ள பொருட்களை திருடியவர்கள் கொண்டு செல்வதற்காக ஆட்டோ அல்லது வேறு ஒரு வாகனம் மூலமே கொண்டு சென்றிருக்க முடியும் இவ்வளவு விடயமும் நடக்கும் வரையில் இந்த திருட்டு கட்டுப்படுத்தப்படவில்லை. 2ம் திகதி காலை நான் கடைக்கு வந்து கடையை திறக்க முற்படும் போதே எனது கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது தெரிந்தது.
எனவே வீதியால் வாகனத்தில் சென்ற தலைமைப் பொலிஸ் நிலைய அதிகாரியின் வாகனத்தை மறித்து இவ்விடயத்தை தெரியப்படுத்தினேன்.
முறைப்பாடு பதிவு செய்ததை தொடர்ந்து விசாரனகள் இடம் பெற்று வருகிறது.எனது கடைக்கு முன்னால் உள்ள மலர்சாலை ஒன்றில் பொருத்தப்பட்டள்ள பாதுகாப்பு கெமராவில் ஆதாரங்கள் பதிவாகி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரனைகள் இடம் பெற்று வருகின்றது.என்றார்.