திருகோணமலை நகரின் கழிவகற்றல் முகாமைத்துவமும் பொதுமக்களின் பங்களிப்பும்

திருமலை ராஜ் திருகோணமலை நகரசபை எல்லைக்குட்பட்ட வடிகான்களை பராமறிப்பதில் பொதுமக்களுக்கும் சமூகப் பொறுப்பு அவசியம் வடிகான்களில் குப்பை கூலங்களை இடாமல் அவற்றை துப்புறவாக பேண வேண்டும்.மேலும் வடிகான்கள் சீராக இல்லாத இடங்களில் அவற்றை தம்மால் இயன்ற அளவு பராமரிப்பதுடன் நகரசபையால் துப்புறவு பணிகளை மேற்கொள்ள வேண்டிய இடங்களை சுட்டிக்காட்டி அவற்றை நகரசபைக்கு முறைப்பாடாக எழுத்து மூலமாக தெரியப்படத்த வேண்டும்.அவ்வாறு பொதுமக்களும் நகரசபையும் இணைந்து பணியாற்றும் போது கனிசமான குறைபாடுகளை தீர்த்து நகரத்தை அழகாகவும் சுத்தமாகவும் பேண முடியும் என தெரிவிக்கிறார் திருகோணமலை நகரசபையின் செயலாளர் யு.சிவராஜா அவர்கள். அண்மையில் இடம் பெற்ற திருகோணமலை ஊடகவியலாளர்கள்களுக்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பனிமனை அதிகாரிகளுக்கும் நுளம்புகளால் ஏற்படும் பிரச்சினையை கட்டப்படுத்தல் தொடர்பாக தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் ஒன்றில் நகரத்தில் உள்ள பிரதான வீதிகளிலும் சரி புறநகர்பகுதிகளிலும் உள்ள வடிகான்களும் பராமரிப்பு மிக மோசமாகவுள்ளது.தொடர்ச்சியாக சுத்தம் செய்யப்படுவது கிடையாது மற்றும்; இவை அதிகமாக நீர் தேங்கி நிற்பதனால் நுளம்புப்பெருக்கம் அதிகரித்து துறுநாற்றம் வீசி அனைவருக்கும் அசௌகரிகத்தை ஏற்படுகிறது. மேலும் மழைகாலம் எனில் மழை வெள்ளத்தில் ஓரளவு சுத்தம் செய்யபடுகின்றபோதும் கோடை காலங்களில் குடியிருப்பு மற்றும் வியாபார நிலையங்களில் இருந்து அகற்றப்படும் கழிவு நீரும் முழுமையாக வடிகான் வழியாக வலிந்தோடுவது கிடையாது அவை தேங்கி நிற்பதனால் நுளம்பு மற்றும் எனைய பிரச்சினைகள் உருவாகின்றது.
எனினும் இவ்வாறு வடிந்தோடி கடலுடன் கலக்கும் சிறிதளவு கழிவு நீரும் கூட சரியான முகாமைத்துவத்துடன் வடிகான் கட்டமைப்பு காணப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இவ்வாறு கடலுடன் கலக்கும் பல இடங்கள் திருகோணமலை நகரசபை எல்லைக்குள் இருந்தபோதும் இதற்கு நல்ல உதாரணமாக நாம் திருகோணமலையின் மூன்று இன மக்களும் செரிந்து வாழும் முருகாபுரி கிராம சேவகர் பிரிவில் உள்ள ஜமாலியா பகுதியில் கழிவு நீர் கடலுடன் கலக்கும் பகுதியில் சரியான முறையில் பராமரிக்கப்படாமையால் எற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக நோக்குவோமானால் ;அது அவ்வாறு தொடர்கிறது. எங்களுடைய இளமைக் காலத்தில் எவளவு துப்பரவாகவும் எவளவு விசாலமாகவும் இருந்த கடற்கரை காணப்பட்டது எங்களது கிராமிய விளையாட்டுக்கள் வளர்ந்த இடமும் பல்வேறு சமூக நிகழ்வுகள் மற்றும் பொழுது போக்கு தளமாகவும் காணப்பட்ட இந்த கடற்கரை மணல் வெளி இன்று இவளவு அசுத்தமாகவும் குறுகியும் காணப்படுகிறது இதற்கு காரணம் இக்கிராமத்திற்கு மேற்கொண்ட அரச வடிகான் திட்டங்களை திட்டமிடாமல் மேற் கொண்டதும் திட்டமிடாத விதத்தில் கொட்டப்பட்ட கடலரிப்பு தடுப்பு கல் வேலியும் இதற்கு ஒர் காரணமாகவுள்ளது. என தெரிவிக்கிறார் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முருகாபுரி கிராம சேவகர் பிரிவில் உள்ள ஜமாலிய கிராம .இஸ்லாமிய வாலிபர் சங்கத்தின் தலைவர்ஏ.ஏம்.எம்.பரீட். திருகோணமலை மாவட்டமானது அழகிய கடற்கரையை கொண்ட இயற்கை வனப்பு மிக்க பிரதேசம் என்பது இலங்கையில் உள்ள அனைவருமே அறிந்த விடயமாகும்.எனினும் இவ்வாறு இயற்கை அழகு கொண்ட கடற்கரையானது.முறையான விதத்தில் பராமரிக்கப்படாமையால் தற்போது தமது உண்மையான அழகை இழந்து நோய்கள் ஏற்படுத்தக் கூடிய கழிவுகள் வந்து சேரும் கழிவு பூமியாக மாறிவருகின்றது. இம் மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் உடற்பயிற்சி மற்றும் சுகமான இயற்கை காற்றை அனுபவிக்க வரும் உள்ளுர் சுற்றுலாப்பயணிகள் முதல் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வரை அனைவரையும் முகம் சுழிக்க வைக்கும் விதத்தில் துறு நாற்றம் வீசக்கூடிய விதத்தில் காணப்படுகிறது.நகரத்தின் கழிவுகள் முதல் புறநகர்பகுதியின் கழிவுகள் அனைத்தும் கடலுடன் கலக்கும் விதத்தில் பிரித்தானியர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட மதகுகளைக் கூட பராமரிக்காமல் இன்று வெறுமனே கடற்கரைமணலில் கழிவுகள் வந்து தங்கும் நிலை உருவாகியுள்ளது.
.இம் முருகாபுரி கிராமசேவகர் பிரிவானது பள்ளத்தோட்டம் முருகாபுரி சிறிமாபுற ஜமாலியா எனும் 04 கிராமங்களை கொண்டது.இக்கிராம சேவகர் பிரிவில் 890 குடும்பங்கள் உள்ளடங்கிய 3500 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் மக்கள் நெறிசலாக வாழ்ந்து வருகின்றனர்.இக்கிராமத்தின் பிரதான வீதி வழியாக வந்தடையும் வடிகான் நேரடியாக கடற்கரையை சென்றடைகிறது.இந்த கழிவை கடல் நீருடன் கொண்டு சேர்க்கும் வடிவமைப்பு இல்லாதால் கடற்கரையில் அங்கும் இங்குமாக கழிவுநீர் தேங்கியிருந்து நுளம்புப்பெருக்கம் மற்றும் துறுநாற்றம் என்பன ஏற்படுவதுடன் பொது மக்களுக்கு நோய்களையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றரர் இஸ்லாமிய வாலிபர் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.முக்தார் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இக்கடற்கரை பாதிப்பதனால் சூழல் மாசடைகிறது.மேலும் மண் அரி;ப்பு எற்படுகிறது.இந்நிலைஇனிவரும் 05 வருடம் இது தொடர்ந்தால் இப்பகுதியில் மீன்வளமும் குறைந்து இக்கிராம மீனவர்கள் வேறு பகுதிகளுக்கு மீன்பிடிக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும் மேலும் எமது கிராத்தில் மண் அரிப்பை தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட கல் வேலியும் கூட திட்டமிட்டு அமைக்கப்படவில்லை ஏதே பெரிய கருங்கற்களை கொண்டு கொட்டிவிட்டு சென்றுள்ளனர் இதனால் போக்குவரத்து இடைஞ்கல் மற்றும் சிறுவர்கள் அதில் ஏறி விளையாடீ வீழுந்து பல முறை காயமடைந்துள்ள சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் மாரி காலங்களில் கடலில் எழும் அலை அதிகமாக வருவதுடன் கடலில் வெள்ளப்பெருக்கும் ஏற்படுவதுன்டு இந்த நேரங்களில் கடற்கரையில் உள்ள மீன் பிடி படகுகளை நாம் வீதிகளிலும் பாதுகாப்பான இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் போது எமக்கு இந்த கல் வேலி பல சந்தர்ப்பங்களில் இடையூராகவே அமைகிறது என்றார் மேலும் கடற்கரையின் எல்லையும் குறைந்துள்ளது.இக்கல் அமைத்த நோக்கம் சரியாக இருந்த போதும் இது நடைமுறைப்படுத்திய விதம் தவறானது என இவர் சுற்றிக் காட்டினார்.
அத்துடன் இப்பகுதியில் செயற்பட்டு வரும் மீன் வாடிகள் சில முறையான கழிவு அகற்றல் நடைமுறையை பின் பற்றாமை காரணமாக அதிலிருந்து ஏற்படக் கூடிய கழிவுகளும் இப்பகுதியை அசுத்தப்படுத்துகிறது.மேலும் கடந்த ஆட்சி மாறிநாளும் மாறாமல் இருக்கும் விடயங்களில் ஒன்றான நாய்த் தொல்லை 200க்கு மேற்பட்ட தெருநாய்கள் இக்கிராமத்தில் காணப்படுவதனால் அவையும் குப்பைகளை கிளரி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்க கொண்டு செல்வதும் சண்டையிடுவதும் என பல அசௌகரிகங்களை ஏற்படுத்துகிறது. மேலும் இது நகரசபை எல்லை என்பதனால் நகரசபை குப்பை அகற்றும் வாகனம் ஒரு கிழமைக்கு ஒருமுறை எமது கிராத்திற்கு வரும் சில வேலைகளில் 02 வாரத்தை கடந்தும் செல்லும் இவ்வாறான நேரம் எமது கிராமமே நரகமாகிவிடும் குப்பைகளளை சேமித்து வைக்கும் பைகளை நாய்கள் சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடும் வீட்டில் உள்ளவர்கள் அதனை பாதுகாப்பதற்கே படாத பாடு பட்டு விடுவார்கள். இங்கே 06 வடிகான்கள் உள்ளன இவை சீராக நகரசபையால் துப்பரவு செய்யப்படுவது கிடையாது எனவும் தெரிவித்தார். இக்கிராமம் 836 தமிழ் வாக்காளர்களையும் 820 முஸ்லீம் வாக்காளர்களையும் 240 சிங்கள் வாக்காளர்களையும் கொண்ட ஒரு பல்லின் மக்கள் வாழும் கிராம சேவகர் பிரிவு என்பதனால் இக்கிராம மக்கள் கூறும் குறைபாடுகள் தொடர்பாக திருகோணமலை நகரசபையின் முன்னால் செயலாளர் றிப்கா அவர்களை இக்கட்டுரையாளன் என்ற அடிப்படையில் வினவியபோது இவ்விடயம் தொடர்பாக தமக்கு எவ்வித முறைப்பாடுகளும் வரவில்லை எனத்தெரிவித்தார். மேலும் இவ்விடயம் தொடர்பாக தான் நேரடியாக சென்று பர்வையிட்டு சீர் செய்வதாகவும் தெரிவித்த செயலாளர்; கடந்த பெப்ரவரி 2016; 03ம் திகதி நகரசபை தொழிலாளர்களை நியமித்து இக்கடற்கரை சுத்தம் செய்யும் பணிகளை மேற் கொண்டார். மேலும் இப்பகுதிக்கான சீரான கழிவு நீர் அகற்றும் நிலையான திட்டம் ஒன்றை எதிர்வரும் நர்ட்களில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் எமக்கு தெரிவித்துள்ளார். எனினும் அவ்வாறான விடயங்களை அவருடைய காலத்தில் அவர் முன்னெடுத்தாக எமக்கு தெரியவில்லை. அதனிடையே திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகருப் அவர்கள் இதற்கான ஒரு திட்டத்தை நகரசபையூடாக தயார் செய்து அதற்கான செலவு விபரத்தை தரமாறு கோரினார் இற்றைக்கு 6 மாதங்களுக்கு மேலாகியும் நகரசபையின் உரிய உத்தியோகத்தரால் அந்த திட்டமோ செலவு விபரமோ வழங்கப்படவில்லை. அத்துடன் நகரசபை செயலாளரான றிப்கா அவர்கள் இடமாற்றம் பெற்று சென்று விட்டார்கள் மேலும் புதிதாக வருகை தந்த யு.சிவராஜா அவர்களிடம் இவ்விடயம் தொடர்பாக மீண்டும் தெளிவு படுத்தியபோது இப்பணிகளை முன்னெடுக்கவும் குறித்த திட்டத்தையும் செலவு விபரத்தையும் வழங்க நடவடி;கையினை புதிய செயலாளர் மேற் கொள்வதாக உறுதியளித்துள்ளார்..அத்துடன் வடிகானுக்கு மேல் மக்கள் பயணிக்க கூடியவாறு சிலேப் அமைத்து போக்குவரத்திற்கான பாதையை சீர் செய்த தருவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.இவற்றை இம் மாதம் அதாவது டிசம்பர் 2016 15ம் திகதிக்கு பின் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இக்கிராமத்தில் உள்ள இளைஞர் அமைப்பும் பொதுமக்களின் விடா முயற்சியால் உள்ளுராட்சி மன்றத்தின் சேவையை பெற முயன்று வருகின்றனர்.உள்ள வளத்தில் உச்ச பயன் என்ற வாசகத்தை தன் மீது சுமந்து பணியாற்றி வரும் உள்ளுராட்சி மன்றங்கள் ஒர் மனிதனனின் கருவரை முதல் கல்லறை வரையான பணிகளை செய்ய வேண்டும் என உள்ளுராட்சி மன்ற சட்டங்கள் கூறிய போதும் அவ்வாறு பணியாற்ற எமது உள்ளுராட்சி மன்றங்களுக்கு பௌதீக வளம் ஆளனி வளம் பற்றாக்குறையாக உள்ளதை பொதுமக்கள் நன்கு அறிவார்கள். எனினும் பொதுமக்களால் கோரப்படுகின்ற பணிகளை முன்னெடுத்து அவர்களின் குறைகளை தீர்ப்பதற்கேனும் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் அற்;பனிப்போடு செயற்பட முயற்சிக்க வேண்டிய தேவை எமது மாகாணம் முழுவதும் உள்ள தேவையாகும்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post