திருகோணமலையில் சேவையில் ஈடுபட்ட இரண்டு பஸ்கள் மீது, நேற்று வியாழக்கிழமை இரவு கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டன. திருகோணமலையில் இருந்து தங்காலை நோக்கி இரவு 9.35க்கு புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் மீது கல்வீச்சு நடாத்தப்பட்டதில் பஸ் கண்ணாடிகள் சேதமாகியுள்ளது. பின்னர் குறித்த பஸ்ஸூக்கு பதிலாக மாற்று பஸ் தங்காலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன என சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த சேதமான பஸ் பொலிஸ் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறே கொழும்பில் இருந்து நேற்று மாலை 5.00 மணியளவில் புறப்பட்டு இரவு 1.00 மணியளவில் திருகோணமலைக்கு வருகை தந்த மூதூர்சாலைக்கு சொந்தமான பஸ் மீது இனம் தெரியாதோர் நள்ளிரவில் கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் பஸ்ஸுக்கு சேதமேற்பட்டதுடன், சாரதிக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம், திருகோணமலை - மடத்தடி பகுதியில் நடைபெற்றுள்ளது.