திருமலை விபத்தில் ஏழு வயது சிறுவன் பலி-7பேர் படுகாயம்

கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான், மின் கம்பத்துடன் மோதி இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 07 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா,சின்னக்கிண்ணியா பகுதியைச்சேரந்த முனீர் அஸ்ரி அஹமட் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 7 பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சடலம், கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post