தற்போது ஏற்பட்டள்ள வரட்சி காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 5 பிரதேச செயலக பிரிவில் உள்ள 24 கிராமங்களை சேர்ந்த 5214 குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளது.என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.சுகுணதாஸ் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான திட்டமிடல் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (18) இடம்பெற்றது. இக் கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட தாக்கம் தொடர்பாக தெளிவுபடுத்தும் போது இவ்வாறு தெரிவித்தார்.
இதனை நிவர்த்தி செய்வதுடன் இனி அதிகரிக்கவுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்தி செய்வதற்காக மாவட்டரீதியாக 6 நீர் பௌசர்லொறிகளும் 42 நீர் பௌசர் டக்டரகளும் 469 பிளாஸ்டிக் நீர் தாங்கிகளும் தேவையாகவுள்ளது.அதனை தமது அமைச்சிடம் கோரியுள்ளோம் என தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் இணைத்தலைவர்களான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகருப் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்
குடிநீர் தட்டுப்பாட்டால் திருமலையில் 5214 குடும்பங்கள் பாதிப்பு
byRajkumar
-
0