கிண்ணியா, புஹாரிச் சந்தியில் 28 மில்லிக்கிராம் போதைப்பொருளுடன் கொழும்பைச் சேர்ந்த 60 வயதுடைய நபரொருவர், இன்று சனிக்கிழமை (26) கைதுசெய்யப்பட்டுள்ளார். பிராந்திய துர்நடத்தை ஒழிப்புப் பிரிவு இவரைக் கைதுசெய்து கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர், வழமையாகக் கிண்ணியாவுக்குப் போதைப்பொருள் கடத்தி வருதாக, தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து குறித்த நபரைப் பரிசோதித்த போதே, அவரிடம் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது என, பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம், முழமையான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணைகள் நிறைவடைந்த பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.