நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சியை திருகோணமலை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆரம்பித்துள்ளனர்.இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த நேற்று மாலை (25) திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள இலுப்பங்குளம் கிராமத்தில் இடம் பெற்றது.
இதன் போது தற்போது மாவட்டத்தில் இடம் பெறுகின்ற வர்த்தக நிலையங்களின் விலை நிர்ணயக் கொள்கைகள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கால எல்லை இது தொடர்பாக மேற்பார்வை செய்து நடவடிக்கை எடுப்பவர்களின் பணியின் துரிதம் தொடர்பாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர்.
மேலும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக செயற்படுவதற்கான சங்கம் ஒன்று இதன் போது ஆரம்ப்பிக்கப்பட்டதுடன் இச் சங்கத்தை பதிவு செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.