சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் எதிர்வருகின்ற 2017ம் ஆண்டிலாவது பிரதேச செயலக ரீதியாக பொருத்தமான செயற்றிட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தி செயற்படுத்துமாறும் இதன் மூலம் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட சதவீத்திலாவது தீர்வுகளை வழங்க முடியுமென்று மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
திருகோணமலை சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் (25) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.
சிறுவர்களின நலன் தொடர்பில் சகல துறைசார் நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டு;ம். ஜனாதிபதி அவர்கள் கூட சிறுவர்களின் நலன் தொடர்பில் கூடிய கவனம் செலுதத்துகின்றார்.
சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் வேண்டும். பெண்கள் வெளநாட்டுக்கு வேலைவாய்ப்புக்கு செல்வதனால் சில பிள்ளைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாக அமைகின்றன.
அத்துடன் சில பிரதேசங்களில் சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுவதுடன் தொடர்ச்சியாக பாடசாலைக்கு வருகை தராமலும் இருக்கின்றார்கள். எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வாக சிறந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா மற்றும் பிரதேச செயலாளர்கள் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அடுத்த ஆண்டு புதிய திட்டம்
byRajkumar
-
0