திருகோணமலை கிண்ணியா துறையடி ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 22.04.2015 புதன் கிழமையன்று காலை 9.00 மணி முதல் 10.30 மணிவரையுள்ள சுபவேளையில் கும்பாபிசேகம் இடம் பெறவுள்ளது.
அதற்கான பூர்வாங்க கிரிகைகள் 20 ம் திகதி திங்கள் கிழமை ஆரம்பமாகி மறுநாள் 21 ம் திகதி செவ்வாய் கிழமை எண்ணை காப்பும் இடம் பெறும்.
கும்பாபிசேக விழா திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான ஆதீன கர்த்தா பிரமஸ்ரீ சோ.இரவிச்சந்திரகுருக்கள் தலைமையில் இடம் பெறவுள்ளது.
நீண்ட காலமாக பராமரிப்பு குறைந்த நிலையில் இருந்து வந்த இவ்வாலயம் புராதண ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா துறையடி ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயத்தில் கும்பாபிசேகம்
byRajkumar
-
0