கட்டன் நெசனல் வங்கியின் கிராமிய எமுற்சி வாழ்க்கையினை வெற்றி கொள்ள வழிகாட்டும் புத்தாண்டு சந்தை நிகழ்வு திருகோணமலை மக்கெய்கர் விளையாட்டு அரங்கில் 06.04.2015 அன்று மலை 3.00 மணியளவில் ஆரம்பமானது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அபிவிருத்தி வங்கிப்பிரிவின் பொறுப்பாளர் லசந்த பெனான்டோ மற்றும் கௌரவ விருந்தினராக கிழக்குப் பிராந்திய சிரேஸ்ட முகாமையாளர் க.ஜெயராஜா சிறப்பு விருந்தினராககிழக்கு பிராந்திய மத்திய வங்கி முகாமையாளர் தர்ம கீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது இவ்வங்கியில் கடன் பெற்று வியாபாரத்தில் முன்னேரிவருவோரின் கடைத் தொகுதிகளும் புதிய தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் தொகைகள் வழங்கும் நிகழ்வும் விருந்தினர்களால் கையளிக்கப்பட்டது.