இலங்கையில் பல வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்

நாட்டில் சிக்கலான சூழ்நிலையில் இயங்கி வரும் பல மருத்துவமனைகள், கிராமப்புற மருத்துவமனைகள் மற்றும் மத்திய மருந்தகங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் மூடப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மீதமாக இருக்க வேண்டிய மருத்துவர்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ள வைத்தியசாலைகள், மருந்துகள் ம ற்றும்ஆய்வக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத வைத்தியசாலைகளில் வைத்தியர்களை தங்க வைப்பதில் பயனில்லை எனவும் மூடப்படும் அபாயத்தில் உள்ள சிறிய மருத்துவமனை குறித்து அடுத்த இரு வாரங்களில் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டு அறிவிக்கப்படும் எனவும்  சங்கத்தின் செயலாளர்


ஹரித அலுத்கே  குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post