அரிசியின் விலை மேலும் உயர்வடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஒரு கிலோ கிராம் அரிசி 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அரிசியின் விலை மேலும் உயர்வடையக் கூடும் என அகில இலங்கை சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பந்துல ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
உலகில் நிலவி வரும் அரிசிக்கான தட்டுப்பாடே இவ்வாறு விலை உயர்வதற்கான காரணம் என தெரிவித்துள்ளார்.</ணீ><ணீ>அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் போர் மூழக்கூடும் என செய்யப்படும் பிரச்சாரங்களும் அரிசிக்கான தட்டுப்பாட்டை வலுப்பெறச் செய்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறைந்த விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.