கலாபூசணம் கவிஞர் த. சிதம்பரப்பிள்ளை எழுதிய 'விரியும் விம்பங்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா 26.11.2016 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் திருகோணமலை முத்தமிழ் சங்கத்தின் தலைவர் இரா. ஸ்ரீ. ஞானேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது ஞானேஸ்வரன் தலைமையுரை ஆற்றுவதையும், நூலாசிரியர் மங்கள விளக்கேற்றுவதையும், நூலூசிரியர் பற்றி கவிஞர் ப. மதிபாலசிங்கம், சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் வி. குணபாலா ஆகியோர் உரை நிகழ்த்த எழுத்தாளரும் கவிஞருமான சேனையூர் இரத்தினா நூல் நயவுரை நிகழ்த்துவதையும், நூலின் முதற்பிரதியை நூலாசிரியர் நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கத்திற்கு வழங்கி வெளியிட்டு வைப்பதையும், நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களி;ல் காணலாம்
