கவிஞர் மூதூர் எம்.எம்.ஏ. அனஸின் 20 ஆவது வெளியீடான திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர். அ. தங்கத்துரையின் வாழ்க்கை வரலாற்றினை வெளிப்படுத்தும் தங்கத்துரைக் காவியம் நூல் வெளியீட்டு விழா 20.11.2016ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூர்மண்டபத்தில் கல்லூரி அதிபர் செ. பத்மசீலன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது அவர் தலைமையுரையாற்றுவதையும், நூல் நயவுரைகளை கவிஞர்களான க. யோகானந்தன், ஏ.எம்.ஏ. அலி, எம்.சீ. சபருல்லாஹ், எஸ். சந்திரகலா நிகழ்த்துவதையும், நூலின் சிறப்புரையை ஓய்வுநிலை அதிபர் இரா. இரத்தினசிங்கம் வழங்குவதையும், நூலின் முதற்பிரதியை நூலாசிரியர் கல்லூரி அதிபர் பத்மசீலனுக்கு வழங்குவதையும், நூலாசிரியர் கௌரவிக்கப்படுவதையும், நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்