திருகோணமலை மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு ஒரு மலேரியா நோயாளியும்,2016இல் ஒரு நோயாளியும் இனங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் அனுசியா ராஜ்மோகன் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (24-11-2016) கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்ற மலேரியா நோயின் அண்மைக்காலப் போக்குகுறித்து ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:தேசிய ரீதியில் 1911 ஒக்டோபர் மாதம் எமது நாட்டுக்குள் இருந்து முழுமையாக இல்லாது ஒழிக்கப்பட்டது.இருந்தும் வெளிநாடுகளில் இருந்து காவிக்கொண்டு வருவோரால் இன்றும் இந்நோயின் ஆபத்திலிருந்து இலங்கையர் விடுபடமுடியாத நிலையில் உள்ளனர்.
நாடுமுழுவதும் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரை இவ்வாறு 37 மலேரியா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.எனவே மலேரியா நோயில் இருந்து விடுதலை பெற்று விட்டோம் என இலங்கையர் சும்மா இருக்கா முடியாது,இதற்காகவே கிழக்கு மாகாண சுகாதார பிராந்திய நிலையம் பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இரத்தப்பரிசோதனை இருபது நிலையங்களில் நடைபெற்று வருகின்றது இதற்காக ஐந்து ஆய்வுகூட நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன,கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை இடப்படுகின்றார்கள் நடமாடும் இரத்தப்பரிசோதனை நிலையங்கள் நடாத்தப்படுகின்றன.
இந்த நிலையில் ஊடகவியலாளர்கள் மலேரியா நோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை செய்வதில் அதிக பங்களிப்பை செய்ய வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.