(வ.புஸ்பகுமாா்)
திருகோணமலை, மூதூரில் கடந்த 2006-08-04ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 17 பணியாளர்களையும் நினைவூ கூர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை (05) காலை, உட்துறை முக வீதியிலுள்ள சட்ட உதவி மையத்தில் கொல்லப்பட்டவரின் தாயாரொருவரினால் நினைவுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் எக்ஷன் பாம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வேனிக் அன்றே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சகோதரர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர். -