அஞ்சல் சேவையானது 200 வருடத்திற்கு மேற்பட்ட வரலாறு கொண்டது 1870 ஆம் ஆண்டு பிரஸ்சியற் நாட்டு படைகள் பாரிஸ் நகரை முற்றுகையிட்ட வேளை புறாக்கள் மூலம் செய்திகள் அனுப்பப்பட்டது. செய்தியானது பாரிஸ் நகரை பெரும் கலக்கு கலக்கியது. புறாக்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்ட செய்திகளில் பல புறாக்கள் உரிய இடத்தை அடையாது பாதை மாறிச் சென்றன. சில புறாக்கள் வழியில் தபால்களை தொலைத்துவிட்டன.
இரண்டாம் நூற்றாண்டில் கடதாசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 15ஆம் நூற்றாண்டில் சாதாரண தபால் விநியோகம் ஆரம்பமாகியது. ஆகாய விமானம் கண்டுபிடிக்கபட்டு 11 வருடங்களின் பின் விமான தபால் சேவை ஆரம்பமானது. நியுயோர்க் மினோலோ போஸ்ட் மாஸ்டருக்கு ஒரு தபால் பொதி வானில் இருந்து 1911ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி போடப்பட்டது. ,இவர் பரந்த வயலில் நின்று சிவப்பு கொடியை அசைத்த படி பெற்றுக்கொண்டார்.
முதன்முதலில் தபால் பொதி மெக் சிக்கோ அரண்மனைக்கு 200 மைல்களுக்கு அப்பால் இருந்து மன்னருக்கு மீன்கள் 24 மணித்தியாலங்களுக்குள் போய் சேர்வதற்கு அஞ்சலோட்டம் மூலம் கொண்டு போய் சேர்க்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.
முதல் தபால் தலைகள்
தபால் விநியோகம் செய்வதற்கு மக்களிடம் இருந்து ஒரு கட்டணம் அறவிட வேண்டிய தேவை ஏற்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த சேர் ரோலன்ட்ஹில் என்பவர் 1835 இல் அஞ்சல் கட்டணத்தை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வைக்கவேண்டும் என ஒரு யோசனையை
கூறினார். 1840 ஆம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி ஒரு பென்னி மதிப்புடைய கறுப்பு நிறத்தில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இதனை பென்னி பிளக்ஸ் (Penny Blacks) என அழைக்கப்பட்டது. 1841 இல் முதல் சிவப்பு நிறத்தில் அஞ்சல் தலை வெளியாகியது. ஆனால் இன்று வரை இங்கிலாந்து நாட்டில் வெளியிடப்படும் அஞ்சல் தலையில் நாட்டின் பெயர் குறிப்பிடப்படுவது இல்லை.
இரண்டாவதாக பிரேசில் நாடு அஞ்சல் தலையை அறிமுகப்படுத்தியது. 1854ஆம் ஆண்டு யூலை மாதம் 1ஆம் திகதி ,ந்தியா தனது முதல் அஞ்சல் தலையை வெளியிட்டது. 1857 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி 6 பென்னி முத்திரை, 1872 இல் பிரிட்டனில் இலங்கை எனக் குறிப்பிடப்பட்ட முத்திரை பாவனைக்கு வந்தது. 1958 ஆம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி சிங்கள எழுத்தில் முதல் முத்திரை வெளியிடப்பட்டது. 1989 ஒக்டோபர் 7ஆம் திகதி ஒஸ்ரியா நாடு முதல் அஞ்சல் அட்டை (Post Card) அறிமுகப்படுத்தியது. 1872ஆம் ஆண்டு ஆவணி மாதம் 22ஆம் திகதி இலங்கையில் அஞ்சல் அட்டை (Post Card) வெளிடப்பட்டது.
1858 ஆம் ஆண்டு இலங்கையில் தந்திச்சேவை ஆரம்பிக்கப்பட்டது. கொழும்புக்கும் காலிக்கும் இடையில் 1877 இல் உள்நாட்டு காசுக்கட்டளைச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் கரையோரப் பிரதேசங்களில் முதன்முதலில் தபால் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1815 இல் கொழும்பு, காலி, மாத்தறை, மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாணம் தபாலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1921 ஆம் ஆண்டு அக்மீமன, ஆனமடுவ, சிலாவத்துறை, திவுலப்பிட்டிய, கிரியெல்ல, மூதூர் ஆகிய உப தபாலகங்கள் திறக்கப்பட்டன. 1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி அஞ்சல் சேமிப்பு வங்கி தேசிய சேமிப்பு வங்கியாக மாற்றப்பட்டது.
தற்போது நவீன சேவைகளாக PMT மூலம் பணம் அனுப்புதல், நிகழ்நிலை (Online) மூலம் மின்கட்டணம் ,தொலைபேசிக் கட்டணம் நீர்க்கட்டணம் ,3ஆம் தரப்பு காப்புறுதிக் கட்டணம், பரீட்சைக்கட்டணம், வங்கி சேவை, வெளிநாட்டு பணப்பரிமாற்றுச் சேவை (western union) மற்றும் உள்நாட்டு விரைவுத் தபால் சேவை (Speed Post) சர்வதேச விரைவுப் பொதி சேவை(EMS) உள்ளு_ர் வியாபார சேவையை ஊக்குவிக்கும் பொருட்டு COD சேவை (Cash on Delivery) என்பன விசேட சேவைகளாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
200 வருடங்கள் பழைமை வாய்ந்த அஞ்சலானது இலங்கையில் அண்ணளவாக 648 அஞ்சல் அலுவலங்கள், 3409 உப அஞ்சல் அலுவலகங்கள், 308 முகவர் அஞ்சல் அலுவலகங்களும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றன.
உலக அஞ்சல் தினம் OCTOBER
1874.09.15 இல் சுவிஸ்லாந்தில் பேன் நகரில் நடைபெற்ற மாநாட்டில் ஒக்டோபர் 9ம் திகதி பொது அஞ்சல் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் பின் 1878தினம்ல் அகில தேச அஞ்சல் சங்கம் என பெயர் மாற்றம் பெற்றது .எமது தினம் இலங்கையானது 1877 இலும் 1949 இலும் இரண்டு தடவை இதில் உறுப்புரிமை பெற்றுள்ளது.
ஒக்டோபர் 9ம் திகதி உலக அஞ்சல் தினமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்றைய தினம் உலக அஞ்சல் தின நிகழ்வையொட்டி பாடசாலை மற்றும் அஞ்சலகங்களுக்கிடையிலான போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தபால் திணைக்களத்தில் அதிகூடிய வருமானங்களை சேகரிக்கும் அஞ்சலர்கள், சிறந்த அஞ்சலகம் மற்றும் உப அஞ்சலகம் என்பன வருடம் தோறும் தெரிவு செய்யப்பட்டு பாராட்டப்படுகின்றார்கள்.
இன்று உலகில் அண்ணளவாக 600,000 அஞ்சல் நிறுவனங்களில் 430 மில்லியன் கடிதங்கள் 6மில்லியன் பொதிகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றது. இன்றைய 149வது உலக அஞ்சல் தினத்தில் நேற்றைய தினத்தை விட நன்றாக இன்றைய தினத்திலும் இன்றைய தினத்தை விட நன்றாக நாளைய தினத்திலும் திறமையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் அனைவரும் செயற்படுவோம்.
நல்லதம்பி குமணன் அஞ்சலதிபர், திருகோணமலை.