(அ . அச்சுதன்)
மூதூர் வலயக் கல்வி அலுவலகப் பிரிவில் 2022-2023 காலப்பகுதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவமாணவிகளையும், கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் செவ்வாய்கிழமை (10) மாலை மூதூர் - சம்பூர் கலாச்சாரம் மண்டபத்தில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம் தலைமையில் இடம்பெற்றது.
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மூதூர் கல்வி வலயம் முதலாம் இடத்தை பெற்று சாதனை புரிந்தது.இதன் பின்னணியிலே இவ் கௌரவிப்பு நிகழ்வானது இடம்பெற்றிருந்தது. மூதூர் வலயக் கல்வி அலுவலகம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இவ் கௌரவிப்பு விழாவின் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் H.E.M.G.திஸாநாயக்க கலந்த சிறப்பித்தார்.விசேட அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கலந்து சிறப்பித்தார். ஏனைய அதிதிகளாக மூதூர் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ,பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.