நாட்டில் நிலவிய வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கும் நடவடிக்கைகள், நாளை முதல் ஆரம்பமாகுமென விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கே இந்த நட்ட ஈடு வழங்கப்படவுள்ளதாகவும் அந்த காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் பாதிப்படைந்துள்ள 13 379.96 ஏக்கர் விவசாய காணிகளுக்காக 6,234 விவசாயிகளுக்கு 166.7மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கப்படவுள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிப்புற்ற விவசாயிகளுக்கு நாளை முதல் நட்டஈடு
bytrinco mirrer
-
0