எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையங்களுக்கு அறியப்படுத்துமாறு பரீட்சை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சையை சுமுகமாக நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் ஒத்துழைப்பை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் எச்.ஜே.எம்.சி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எனவே, அனர்த்த முகாமைத்துவ மையத்துடன் இணைந்து, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் எச்.ஜே.எம்.சி ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.