கிண்ணியா மஜீத் நகர் , நடுவூத்து ,மஹரு கிராம பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் மற்றும் பழ மர கன்றுகள் வழங்கல்
முஸ்லிம் எய்ட் கிண்ணியா பிரதேசத்தில் முன்னெடுத்துவரும் விவசாய வாழ்வாதர திட்டத்தில் ஒரு பகுதியாக பயனாளிகளுக்கு விவசாய உள்ளீடுகள் மற்றும் பழ மர கன்றுகள் வழங்கும் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி அவர்களின் தலைமையில் 12.10.2023 வியாழன் நடைபெறறது.
இந் நிகழ்வில் மஜீத் நகர் , நடுவூத்து ,மஹரு கிராம பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கு பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. இதில் பிரதேச செயலக அரச சார்பற்ற நிறுவன ஒருங்கிணைப்பாளர் கே.பாஜில் , முஸ்லிம் எய்ட் அதிகாரி எஸ்.எம்.ரிபாய் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , விவசாய போதனாசிரியர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
இம்மாதம் சுமார் 14 மில்லியன் பெறுமதியான விவசாய உள்ளீடுகள் 35 விவசாயிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஹஸ்பர்.