(மூதூர் நிருபர்)
திருகோணமலை எவரெஸ்ட் கலைக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், பிரியாவிடை வைபவமும் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு திருகோணமலை சன்சைன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக முதல்வர் கலாநிதி வீ. கனகசிங்கமும், கெளரவ விருந்தினராக பேராதனைப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி தி. விநாயகதாஸனும், சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் எம். கலைஞானசுந்தரம், திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.மோகனேந்திரம்,மற்றும் திருகோணமலை வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் என். ஜசிந்தனும், விசேட விருந்தினராக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் அரசரெத்தினம் அச்சுதன் அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.