(ஆர்.சுபத்ரன்)
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 36 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்திப்பிரமாண நிகழ்வு நாளை 28ம் திகதி திருகோணமலை நகரசபையின் நகர மண்டபத்தில் காலை 9.00 மணியளவில் இடம் பெறவுள்ளது.என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையின் தலைவரும் முன்னால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் வட்டார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 33 உறுப்பினர்களுக்கும் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 03 உறுப்பினர்களுக்குமாக மொத்தம் 36 உறுப்பினர்கள் இந்த சத்திய பிரமான நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவர் சி.தண்டாயுதபாணி தலைமையில் இடம் பெறவுள்ள இந்நிகழ்வுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னால் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம்; கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் குகதாசன் மறறும் முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.