திருமலையில் பதவிவிலகி உதவியவர்களுக்கு சம்பந்தன் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு



(திருமலை நகர் நிருபா்)



திருகோணமலையில் குறிப்பிடத்தக்க அபிவிருத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதனை மேற்கொள்ளத்தக்க தலைவர்கள்  நகர சபையில் வரவேண்டும் என எமது கட்சி எதிர் பார்த்தது.இந்த தேர்தல் முறையால்  அது இடம்பெறாத நிலையில் அதனை நிவர்திக்க தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினர் முன்வந்தமை மிகவும்பாராட்டத்தக்கது. அதனால் இன்று நகரபையின் தலைவராக  ந.இராசநாயகம் தெரிவுசெய்யக்கூடிய சூழல் எற்பட்டது.என எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் குறிப்பிட்டார்.
திருகோணமலை நகரசபையிலும் , பட்டணமும் சூழலும் பிரதேச சபையிலும் தலைவர் தெரிவில் ஏற்பட்ட நெருக்கடிக்கு உதவியவர்களை வெளிப்படுத்தும் வகையிலான செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.

அவர்இங்குமேலும் குறிப்பிடுகையில், எனது வலப்புறமாக இருப்பவர் தம்பி தனராஜ் அவர்கள் எமது கட்சியில் அன்புவழிபுரம் இரட்டைத்தொகுதியில் வெற்றிபெற்ற உறுப்பினராவார்.

அவரது தியாகத்தால்தான் இன்று நகரசபையில் நாம் அபிவிருத்தி கருதி மக்கள் முன் தேர்தலில் முன்நிறுத்திய  அனுபவம் வாய்ந்த நா.இராஜநாயகம் அவர்களை இன்று தலைவராக்கமுடிந்தது.

எனது இடது பக்கத்தில் இருப்பவர் புளியங்குளத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் தம்பி சிவராஜா அவர்கள். தம்பி சிவராஜா அவர்களும் தானாகவே முன்வந்து தனது பதவியைத் துறந்து பிரதேச சபையில் நாம் முன்நிறுத்திய பல அனுபவங்களைக்கொண்ட டாக்டர் ஜி.ஞானகுணாளனை  தலைவராக்க உதவியுள்ளார். இவர்களது தியாத்தை நாம் நன்றியுடன் பாராட்டு கின்றோம்.

இந்த தேர்தல் ஒரு புதுமுறையில் நடைபெற்றது.வட்டார ரீதியாகவும் விகிதாசார ரீதியாகவும் ஒரு கலப்பு தேர்தலாக இருந்தது.நாங்கள் பட்ணத்தில் எமது விகதாசாரப்பட்டியலில் முதலிடத்தில் நகர அபிவிருத்தி சம்பந்தமாக பணியாற்றி அனுபவம் வாய்ந்த இளைப்பாறிய  ந.இராஜநாதன் அவர்களை நிறுத்தியிருந்தோம்.

பட்டணமும் சூழலையும் பொறுத்தவரையில், சுகாதாரத்துறையில்,மட்டுமன்றி பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றிய  வைத்திய கலாநிதி ஞானகுணாளனை  தேர்தலுக்காக நிறுத்தியிருந்தோம்.

துரதிஸ்ர வசமாக  இந்த தேர்தல் முடிவுகள் அனுபவம் இல்லாததனால்  விகிதாசார அடிப்படையில்  அதிகளவிலானோர் வட்டாரங்களில்  தெரிவாகியும் கூட எவரும் தெரிவாகவில்லை.

 இதனால் நாம் மக்கள் முன்நிறுத்திய இரண்டு வேட்பாளர்களும்  அதாவது ராஜநாதன்,மற்றும் குணாளன் அவர்களும் தெரிவு செய்யப்பட வில்லை.

இந்தச்சூழலில் இந்த சபைகளுக்குள் இவர்களைக் கொண்டு வருவதற்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் யாராவது ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற நிலமை ஏற்பட்டது.இது விடயமாக தெரிவான சகல உறுப்பினர்களுடனும் நாம் பலமுறை பேசினோம்.இந்நிலையில் தம்பி தனராஜ் மற்றும் சிவராஜா இருவரும் தாமாகவே முன்வந்து தமது உறுப்பினர் பதவியை ராஜினாம செய்துதவினார்கள் அவர்களது தியாகம் காரணமாகவே இன்று நகரசபை பதவிப்பிரமாணம் தெரிவு செய்ய முடிந்தது. அதே போன்று வரும் திங்களன்று பட்டணமும் சூழலும் சபையில் வைத்திய கலாநிதி  ஞானகுணாளனும் தெரிவாகலாம். என நாம் நம்புகின்றோம்.

திருகோணமலையில் சிங்கபூர்  கம்பனியின் மூலம் பலவித மான ஆய்வுகளைச்செய்து திட்டம் தயாரித்துக்கொண்டு வரவதாக நாங்கள் அறிகிறோம் அவ்வாறா நிலை வரும் போது அதனை செய்விக்க அனுபவம் வாய்ந்தவ்கள் வரவேண்டும் என நாம் இவர்களை மக்கள்முன்கொண்டு வந்தோம். அவர்களும் பல பிரச்சாரங்களில் ஈடுபட்டார்கள்.மக்களும் அதனை ஏற்று வாக்களித்தார்கள்  இந்நிலையில் தேர்தல் தொடர்பான நிலமைகளால் அது முடியாமல்போன நிலையில் இவர்களது தியாகம் இந்த மண்ணிற்கு பெரும் நன்றிக்குரியதாகும் அவர்களை நாங்கள் பாராட்டுகின்றோம். எனவும் தெரிவித்தார்.  




Attachments area

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post