-சுபத்ரன்-
திருகோணமலை மாவட்டத்தில் 49 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று 19ம் திகதி பொது மக்களால் உந்துருளி பேரனி ஒன்று இடம் பெற்றது.
மூதுார் கிழக்கு நாவலடிச் சந்தியில் ஆரம்பமான இப் பேரனி கிண்ணியா வழியாக தம்பலகாமம் ஆதரவாளர்களையும் இணைத்து திருகோணமலையை வந்தடைந்தது.
இதன் போது கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன் போராடி வருகின்ற பட்டதாரிகளுடன் கலந்துரையாடிய போது பட்டதாரிகளின் போராட்டமானது தற்போது மென் போக்காக உள்ளது இதனை ஒரு போதும் அரசு கண்டு கொள்ளாது.
அப் போராட்டத்தின் வடிவம் மாறவேண்டும் அப்போது தான் உங்களுக்கான தீர்வு கிட்டும் அது கிடைப்பதற்கான போராட்டத்தை நீங்கள் ஒன்று கூடி வடிவமைத்தால் அதற்கான ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராகவுள்ளொம் என முன்னால் மூதுார் பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் க.திருச்செல்வம் தெரிவித்தார்.
மேலும் பட்டதாரிகளின் வாழ்க்கையினை வருமானம் ஈட்டுகின்ற வகையில் மாற்றியமைப்பதற்குத் தேவையான சரியான முறையான கொள்கைத் திட்டத்தினை துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு அமைத்து அதன் கருத்த்துக்களின் அடிப்படையில் வகுத்தல் வேண்டும்.என்பன போன்ற
விடயத்தை வழியுருத்திய மகஜர்கள் ஐனாதிபதி பிரதமர் கிழக்கு மாகாண ஆளுனர் கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு மாகாணசபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.