மலையகத்தில் கடந்த நான்கு மாதங்களில் 4,268 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்திலேயே, அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில், கடந்த நான்கு மாதங்களில் 1,274 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் 879 பேரும் கேகாலை மாவட்டத்தில் 781, பதுளை மாவட்டத்தில் 522, மாத்தளை மாவட்டத்தில் 364 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 318 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 130 பேரும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.