திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று 28ம் திகதி கிழக்கு மாகாணசபையின் இரண்டு பிரதானவாயில்களையும் மறித்து தமக்கான உரிய தீர்வை வழங்க வேண்டும் என கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றுடன் 27வது நாளாக இவர்கள் முன்னெடுத்துவரும்
போராட்டமானது.கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன் முன்னெடுத்து வருகின்ற இச்சமயத்தில் இன்று அதிகமான பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஊர்வலகமாக ஆளுனர் அளுவலகம் மன் இருந்து கிழக்கு மாகாணசபை வரை வந்து மாகாகணசபை வாயிலை முற்றுகையிட்டு தமது போராட்டத்தை நடாத்தினர்.
கிகழ்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் தமக்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகவதாகவும் 4700 பேருக்கான வேலை வாயப்;பு வழங்க மத்திய அரசிடம் அனுமதிக்காக காத்திருப்பதாக தெரிவித்த கருத்திற்கு தற்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் வந்து தமக்கு பதிலிக்க வேண்டும் என்று கோரியே இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டமானது நண்பகல் 12.15 முதல் 1.00 மணி வரை இடம் பெற்றது.மாகாணசபைக்குள் நுழைய எத்தனித்த பட்டதாரிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் 4 பேரை மட்டும் அழைத்து அலுவலகத்தினுள் சென்று பேசுமாறு கோரியதற்கு மறுத்த பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட அதிகாரி இவ்விடத்தின் முன் வந்து பதில் வழங்க வேண்டும். என கோரி பிரதான வாயில் இரண்டுக்கும் முன் அமர்ந்தனர்.இது மதிய உணவுக்கான விடுமுறை நேரம் என்பதனால் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் வெளியே செல்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டது.சுமார் 1 மணிநெரம் இந்த நிலை நீடித்தது.
இச் சமயத்தில் இங்கு வருகை தந்த திருகோணமலை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பட்டதாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.அதனைத் தொடர்ந்து அதிகாரிகளை பிரதான வாசலுக்கு அழைத்து வர சென்ற போதும் அது சாத்திமாகவில்லை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இல்லை நிர்வாக உத்தியோகத்தர் மட்டுமே உள்ளதால் நாளை வந்து தமது கேள்வி;கான பதிலை அறியுமாறு பொலிசார் தெரிவித்தனர்.சில நிமிடங்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் அதன் பின்
பிரதான வாசல் மூலமாக உத்தியோகத்தர்களின் பயணத்திற்கு அனுமதிக்கபட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்ட காரர்களில் ஒருவர் இவ்வாறு தெரிவத்தார்.நாம் இன்று ஆர்பாட்டத்ம் செய்து கிழக்கு மாகாணசபைக்குள் நுழைய முற்பட்ட போது அதனை பொலிசார் தடுத்தனர்.இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால் இப்போராட்டம் வேறு வடிவில் பரினமிக்கும் திருகோணமலையில் தற்போது இளைஞர்களை முன்னேற்றும் யொவுன்புர நிகழ்வு நடைபெறவுள்ளது ஆயினும் இன்னுமொரு இளைஞர் கூட்டம் பட்டம் பெற்று வேலை இல்லாது வீதியில் நின்று போராட வேண்டியுள்ளது.
ஏதிர்க்சட்சித் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களும் எமக்கு உறுதியளித்திருந்தார்கள் ஜனாதிபதி அவர்களை வடகிழக்கு ரீதியாகவுள்ள பட்டதாரிகளை சந்திக்க வைத்து தமக்கான தீர்வினை வழங்க முயற்சிப்பதாக கூறி அதற்காக 30ம் திகதி வரை காலம் கேட்டிருந்தனர்.ஆயினும் அது சம்மந்தமாக என்ன நடவடிக்கை எடுத்தள்ளனர் என்று எமக்கு தெரியவில்லை.
இப் போராட்டம் ஆளுனர் அலுவலகத்திற்கு முன் மீண்டும் தொடரும் என தெரிவித்து கிழக்கு மாகாணசபையை விட்டு கலைந்து சென்றனர்.
கிழக்கு மாகாணசபையை முற்றுகையிட்டு பட்டதாரிகள் போராட்டம்
byRajkumar
-
0