பூலோக மகா சக்தி அன்னை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள்
ஆலய வருடாந்த பிரமோற்ஸவம் எதிர்வரும் 30ம் திகதி வியாழற்கிழமை காலை 8.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து 08.04.2017 அன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு இரதோற்சவம் 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை சூரியோதயத்தில் தீற்தோற்சவமும் இடம் பெறவுள்ளது.
கொடியேற்றத்தை தொடர்ந்து வருகின்ற 31.03.2017 முதல் 07.04.2017 வரையுள்ள தினங்களில் அதிகாலை 5.30 மணிக்கு அபிசேகம் 7.00 மணிக்கு மூலஸ்தான பூஜை 7.45க்கு தம்பபூஜை 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜை 10 மணிக்கு திருவிழா நிறைவு பி.ப 2.30 மணிக்கு அபிசேகம் 3.30 மணிக்கு மூலஸ்தான பூஜை 4.15க்கு தம்பபூஜை 5.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை 6.00 மணிக்கு திருவிழா 7.30 மணிக்கு நிறைவு
கற்பூரச் சட்டி எடுத்தல் அடி அழித்;தல் அங்கபிரதட்ணம் செய்யும் விரதகார அடியார்கள் கோபுர வாசலிலேயே ஆரம்பித்து கோபுர வாசலிலேயே நிறைவு செய்யுமாறும் வைச சமய கோட்பாடுகளுக்கு இணங்க வீதிகளில் நடமாடவேண்டும் எனவும் ஆதீனகர்த்தா வேதாகமமாமணி பிரமஸ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்.
30ம் திகதி முதல் பத்திரகாளி அம்பாள் ஆலய திருவிழா ஆரம்பம்
byRajkumar
-
0