கிழக்கில் தீவிரமாக பரவிவரும் டெங்கை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முறையான திட்டங்களை வகுக்க வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள கிண்ணியா வைத்தியசாலையை கிழக்கு மாகாணத்தினால் பராமரிக்க முடியாவிட்டால் அதனை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்வதற்கு விடுவிக்குமாறு கிண்ணியா பிரதேச மக்கள் கோரிக்கை விடுப்பதாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் 75ஆவது சபை அமர்வு இன்று (21) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் தீவிரமாக பரவிவரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரப் பிரேரணையினை சமர்ப்பித்து உரையாற்றுகையிலே உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் சுமார் 4000 பேர் பாதிக்கப்பட்ருப்பதுடன் பலபேர் உயிரிழந்தும் உள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோயினால் இதுவரை 15பேர் உயிரிழந்துள்ளனர். மிகத் தீவிரமாகப் பரவிவரும் டெங்கு நோயினால் அம்பாரை மாவட்டத்தில் நானும் எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் தாயை இழந்துள்ளேன். குறிப்பாக கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாகாண, சுகாதார அமைச்சுக்களும், உள்ளுராட்சி அமைச்சும் இணைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த போதிலும், கிண்ணியா பிரதேசத்தில் இதுவரைக்கும் டெங்கு நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் 60மூ பகுதிகளிலே துப்பரவு செய்யப்பட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேசத்தில் மிகுதியாக உள்ள 40மூமான பகுதிகளில் எவ்விதமான டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதனால் இப்பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருக்கம் அதிகமாக உள்ளதால் இப்பிரதேச மக்களும் டெங்கு நோய் பாதிப்புக்கு உள்ளாக்கப்படும் அபாயநிலை உருவாகியுள்ளது. கிண்ணியா பிரதேசத்தில் மிகுதியாக உள்ள பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி சபைகளில் உள்ள இயந்திர உபகரணங்களையும், மனித வளங்களையும் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும், கிழக்கு மாகாண முதலமைச்சும் இணைந்து கிண்ணியா பிரதேசத்தில் முன் மாதிரியான செயற்திட்டமொன்றினை, செயல்படுத்துமாறும் கிண்ணியா பிரதேசத்தில் இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட, டெங்கு நோய் பரவி வரும் ஏனைய பிரதேசங்களுக்கும் இத் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன் கிண்ணியா தள வைத்தியசாலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஆண்,பெண் மற்றும் சிறுவர்கள் ஒரு கட்டிலில் மூன்று பேர் இருந்து சிகிச்சை பெறும் அவலநிலை காணப்படுகின்றது. எனவே கிழக்கு மாகாண சபை தவிசாளர் உடணடியாக கிண்ணியா வைத்தியசாலைக்குச் சென்று டெங்கு நோயாளர்கள் கஷ்டமான நிலைமைகளைப் பார்க்க வேண்டும். சுமார் ஒரு லட்சம் மக்கள் வாழும் கிண்ணியா பிரதேசத்தில் அமைந்துள்ள தள வைத்தியசாலை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சு பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் எங்களிடம் இருக்கத்தக்கதாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டள்ள கிண்ணியா பிரதேச நோயாளர்க்ளுக்கு அத்தியவசியத் தேவையான கட்டில்களையும், அவச வைத்திய உபகரணங்களையும் வழங்குவதற்கு முடியாமள் உள்ளமை கவலையளிக்கிறது. குறிப்பாக நமக்குப் பிறகு உருவான வட மாகாண சபை இந்தவிடயத்தில் நமக்கு முன்னுதாரனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே, கிழக்கு மாகாண சபையின் விசேட நிதியினை அவசரமாக ஒதுக்கி கிண்ணியா தள வைத்திசாலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு கட்டில் மற்றும் தேவையான உபகரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தா

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post