கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று (21) நடைபெற்றபோது, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார். மாகாண சபையின் சில அமர்வுகளில் இவர் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது