கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் காத்தான்குடி நகரசபை, பிரதேச சபைகளான அட்டாளைச்சேனை, ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றுக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதினால் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்காக வாகனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வு நேற்று (07.01.2017) காத்தான்குடி நகரசபையிலும், ஓட்டமாவடி பிரதேச சபையிலுமாக இடம்பெற்றன. நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கெளரவ அதிதியாக மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.ஹமீட் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சித்ரவேல் ஆகியோருடன் பிரதேச சபைகளின் செயலாளர்கள் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து