திருகோணமலை மக்களின் இன ஒற்றுமையை சீரழிக்க விசமிகளால் மேற் கொள்ளப்படும் திட்டமிட்ட செயற்பாடுகளையும் மக்களால் பூஜிக்கப்படகின்ற ஆலங்களை உடைத்து அராஜகம் செய்யும் விசமிகரைளயும் நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.என கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்தார்
நிலாவெளியில் உள்ள அடம்போடை வீதி கூலாவாடியில் விநாயகர் ஆலயம் உடைக்கப்ட்டு கற்பக்கிரகத்தில் உள்ள விக்கிரகம் தூக்கி விசப்பட்ட விடயம் தொடர்பாகவும் நிலாவெளியில் 2ம் வட்டாரத்தில் உள்ள பத்தினி அம்பாள் ஆலய கோபுரகலசம் உடைக்கப்பட்டது. தொடர்பாக தமது சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் கடுமையான கண்டனத்தை தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றையும் இன்று (4) புதன் கிழமை வெளியிட்டிருந்தார்.
அவ் அறிக்கையானது இவ்வாறு தொடர்கிறது.
திருகோணமலை மாவட்டத்தில் காலத்திற்கு காலம் இவ்வாறான சம்பவங்கள் தொடர்கதையாகவே காணப்படகிறது. ஆயினும் இவ்வாறான விடங்கள் தொடர்பாக குற்றவாளிகள் இனங்கானப்படுவதும் அவர்களுக்கான தண்டனை வழங்கும் செய்தியையே நாம் அறியவில்லை அவ்வாறு இல்லாதது. இன்றைய நல்லாட்சியில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட வேண்டும்.மேலும்
தமிழ் முஸ்லீம் மக்கள் நெருக்கமாக வாழும் இந்த நிலாவெளி பகுதியில் இவ்வாறான விடயம் இம் மக்கள் மத்தியில் இன முருகலை எற்படுத்த செய்துள்ள திட்டமிட்ட நடவடி;கையாகவே நான் நோக்குகின்றேன்.
இவ்வாறு ஆலத்தை உடைத்து அராஜக வேலையைச் செய்து இந்துக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்த என்னும் விசமிகளை இனங்கண்டு சட்ட நடவடிக்கையை மேற் கொண்டு அனைத்து இன மக்களிடையேயும் இன நல்லுறவு ஏற்பட வழிவகுக்க வேண்டும்.என தமது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
நிலாவெளியில் 2 ஆலயங்கள் உடைக்கப்பட்டமைக்கு கடும் கண்டனம்-ஜெ.ஜெனார்த்தனன்
byRajkumar
-
0