திருகோணமலையில் இனம் தெரியாத மர்ம நபர்களினால், நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.குறித்த புத்தர் சிலைகள் வெல்கம் விகாரை மொரவெவே சந்தி, புல்மோட்டை 14 ஆம் கட்டை, மற்றும் திரியாய் சந்தியிலே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது
வில்கம் விஹாரை-மொறவெவ மற்றும் திரியாய் சந்தியிலுள்ள புத்தர் சிலைகளே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கிடந்ததை கண்ட பிரதேச மக்கள் மத்தியில் இடம் பெற்ற இச்சம்பவம் பதட்டத்தை எற்படுத்தியுள்ளது.
மொறவெவ நகரத்திலிருந்த புத்தர் சிலையை திருகோணமலை பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் இன்று அதிகாலை 2.52 மணியளவில் உடைத்து விட்டு மீண்டும் திரியாய் சந்திப்பக்கம் செல்வதை சீசீடி கெமரா மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் மோட்டார் சைக்கிள் இலக்கமோ அல்லது உடைப்பவர்களையோ இணங்கான முடியாத நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
மொறவெவ பிரதேசத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாகவும் ஒரே சங்கங்களில் அங்கத்துவம் வகித்தும் நெருங்கிய உறவுகளுடன் வாழ்ந்து வரும் இக்கால கட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகளை செய்து மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சிப்பதாகவும் மக்கள் குழப்பமடைய தேவையில்லையெனவும் மொறவெவ பிரதேச இளைஞர் கழகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது
திருகோணமலையில் 4 இடங்களில் ஓரிரவில் புத்தர்சிலை உடைப்பு
byRajkumar
-
0