திருகோணமலையில் எதிர்வரும் 11.01.2017 (புதன்கிழமை) அன்று காலை 9.30 மணியளவில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள சட்ட உதவி மைய வளாகத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெறவுள்ளது.
திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியத்தால் நடாத்தப்படவுள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டம் 5 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து இடம் பெறவுள்ளது.
இவை வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அதிகாரப் பகிர்வு வேண்டும் , களப்பு நீதி மன்றம் உருவாக்கப்பட்டு நீதி நிலைநாட்டப் படல் வேண்டும் , பயங்கர வாத தடைச்சட்டம் நீக்கபட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
நடந்தேரிய சித்திரவதை படுகொலைகளை விசாரிப்பதற்கான விசேட பொறி முறை உருவாக்கப்பட வேண்டும் இ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த கவனயீர்ப்பு இடம் பெறவுள்ளது என சட்ட உதவி மையத்தின் பிரதிநிதிகள் இன்று (8) ஊடகங்களுக்கு தெரிவித்தனர்..
புதனன்று மாபெரும் கவனயீர்ப்புக்கு திருமலையில் ஏற்பாடு
byRajkumar
-
0