இன விகிதாசார அடிப்படையில் தமிழ் பாடசாலைகளையும் முஸ்லீம் பாடசாலைகளையும் உருவாக்க வேண்டியுள்ளது. என்ற கருத்துக்கள் தமிழ் முஸ்லீம் மக்களின் வாக்குகளைப் பெற்று கிழக்கு மாகாண சபையில் ஆட்சி நடாத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரசின் தலைவர்களாலேயே கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் உறவை பாதிக்கும் நிலை உருவாகி விடும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது நாம் சிந்தக்க வேண்டியவர்களாக உள்ளோம்.என கிழக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையின் 2017ம் அண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நேற்று (21) கல்வி அமைச்சின் குழு நிலை விவாதத்தின் போது பேசிய முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.அன்வர் அவர்களர் மாவட்டத்தில் முஸ்லீம் மக்களின் இன விகிதாசாரத்திற்கு அமைய புதிய முஸ்லீம் பாடசாலைகள் அமைக்க வேண்டும் என்ற கருத்திற்கு பதிலளித்த ஜெ.ஜெனார்த்தனன் இவ்வாறு தெரிவித்தார.
தொடர்ந்து உரையாற்றும் போது தேசிய ரீதியாக 98 கல்வி வலயங்கள் உள்ள போதும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா மூதூர் போன்ற வலங்கள் 95 வது இடத்திற்கு மேலே தான் காணப்படுகிறது. இந்த நிலையில் இவற்றை முன்னனிலைக்கு கொண்டு வருவதை விட்டு விட்டு புதிய வலயங்களையும் புதிய பாடசாலைகளையும் உருவாக்கவதில் பயனில்லை இடப்பற்றாக்குறை ஆசிரியர் பற்றாக்குறை என்பவற்றை தீர்த்து வைத்து அந்த மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வழிவகுக்க வே;ணடியது நாம் அணைவரின் கடமையாகும்.
மேலும் 2016ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்திற்கென மத்திய அரசாங்கத்தால் 31 மைதானங்களை புனரமைப்பு செய்வதற்கென 53.38 மில்லியன் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்ட போதும் அதில் 3 மில்லியன் மட்டுமே தமிழ் பகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை இம்மாதம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தெரிய வந்தது.அந்த விடயத்தில் தவறு மற்றும் இனவேறுபாடு என்ற விடயங்கள் இருந்த போதும் அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பான நாம் கன்னியமாக நடந்து கொண்டோம். என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புக்கின்றேன் என கிழக்கு மாகாணசபையின் உறுபட்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்தார்.
கிழக்கில் தமிழ் முஸ்லீம் உறவை பாதிக்கும் கருத்துக்களை மக்கள் பிரதிநிதிகள் பேசக் கூடாது-ஜெ.ஜெனார்த்தனன்
byRajkumar
-
0