கிழக்கு மாகாணசபையின் பதில் முதலமைச்சராக கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி இனறு; நண்பகல் 12.45 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெனான்டோ முன்னிலையில் ஆளுனர் மாளிகையில் பதவிப்பிரமானம் செய்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் ஈரான் நாட்டிற்கு கிழக்கிற்கான வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றிற்காக நேற்று 26ம் திகதி சென்றிருந்த நிலையில் இன்று பதில் முதலமைச்சராக தான் பொறுப்பேற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறினார்.
மேலும் கிழக்கு மாகாண சபையில் உள்ள ஏனைய அமைச்சர்களின் வேண்டு கோளுக்கு அமைய நான் இன்று இப்பதவியை ஏற்றுள்ளேன்.எமது மாகாணத்தில் உள்ள அமைச்சர்கள் நாம் ஒரு புரிந்ணதுர்வுடனும் கூட்டப் பொறுப்புடனும் எமது கடமைகளை ஆற்றி வருகின்றோம்.
ஒவ்வொறு அமைச்சர்களும் தங்களுடைய அமைச்சர்களின் கடமையை ஆற்றுக்கின்ற அதே வேளை ஏனைய அமைச்சர்களின் கடமைகளுக்கு ஒத்தாசை வழங்கும் கலாச்சாரத்தையும் பின் பற்றி வருகின்றோம் அதற்கமைய இந்த தற்காலிக பதில் முதலமைச்சர் பதவியை நான் ஏற்றுள்ளென். எமது மாகாணத்தில் உள்ள மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் சிறப்பாக செய்வதற்கும் நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற் கொள்வோம்.
என அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக சி.தண்டாயுதபாணி சத்தியப்பிரமாணம்
byRajkumar
-
0