கிழக்கு மாகாண கட்டிடஒப்பந்தக்கார் ஒன்றியம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்..

கிழக்கு மாகாண கட்டிடஒப்பந்தக்கார் ஒன்றிய அங்குரார்பணக்கூட்டம் திருகோணமலை ஜேகப்விடுதியில் இன்று காலை 10.30மணியளவில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஒன்றியத்தின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்து ஆரம்பித்து வைத்தார். ஒன்றியத்தின் தலைவர் ரஞ்சித மூர்த்தி தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாணத்தைச்சார்ந்த பல ஒப்பந்தக்காரர்களும் கலந்துகொண்டனர். இங்கு வரவேற்புரையை ஒன்றியத்தின் செயலாளர் சரத்சந்திரவிஜயசூரிய நிகழத்தினார். இதன்போது, வடகிழக்கு மாகாணத்தில் உள்ள பல கட்டிட ஒப்பந்தக்கார்களுக்கு பல்வேறு உதவி உபகாரங்கள் கிடைப்பதில்லை. கடன் உள்ளிட்ட பல வசதிகள் வடகிழக்கு தவிர்ந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கே கிடைத்து வந்தன. அதற்கு யுத்தம் காரணமாக விருந்தன. ஆனால் அதற்கெல்லாம் இன்று முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த ஒன்றியம் உருவாக்கம் அமைந்துள்ளன. எனவும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ஒன்றியத்திற்கான வெப்தளமும் முதலமைச்சரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post