சகல உள்ளுராட்சி மன்ற ஊழியர்களும் தயாராக இருக்க பணிப்பு

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள  மழை வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டால்  சகல உள்ளூராட்சி மன்றங்களும் 24 மணிநேர ஊழியர்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும்போது.. உடனடியாக வெள்ளம் வடிந்தோடவும் பொதுமக்களுக்கான சேவைகள் வழங்கவும் சகல ஏற்பாடுகளுடனும் ஆயத்தநிலையில் இருக்குமாறும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பணிப்புரைக்கமைய முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் சற்று முன்னர் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். 

அத்துடன் அசெளகரியங்களுக்குள்ளாகும் பொதுமக்களுக்கான சேவைகள் செய்யத்தவறும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலும் முதலமைச்சருக்கு தகவல் வழங்க முடியும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post