மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வும் திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .
இதன் ஒரு நிகழ்வாக திருகோணமலை சிவன் கோயிலில் விசேட பூசை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து
இன்று மாலை 6.05 மணியளவில் திருகோணமலை சிவன் கோயிலடி தந்தை செல்வா சிலையின் வளாகத்தில் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் முன்னால் நகரசபை தலைவர் க.செல்வராஜா உப தலைவர் சிறிஸ்கந்தராஜா உறுப்பினரகளான கா.கோகுல்ராஜ் சத்தியசீலராஜா கௌரிமுகுந்தன் முன்னால் பட்டிணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் த.காந்தரூபன் உப தலைவர் வெ.சுரேஸ் உற்பட பலர் கலந்து கொண்டனர்