சம்பூர் கலைஞர்களின் கேட்காத குரல்கள் குறும்படத்தின் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு

சம்பூர் கலைஞர்களின் கேட்காத குரல்கள் குறும்படத்தின்  இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று 05 ம் திகதி காலை 9.30 மணியளவில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில்   திருகோணமலை லயன்ஸ் கழக செயலாளர் க.திருச்செல்வம் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற றுப்பினர் சுமந்திரன் மற்றும்; கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சர் சி.தண்டாயதபாணி மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்னசிங்கம் மற்றும் மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் மற்றும் நாகேஸ்வரன் மற்றும் உப்புவெளி பிரதேசசபை தலைவர் விஜேந்திரன் உற்பட உள்ளுராட்சி மன்ற துணைத் தலைவர்கள் உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் அதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர் 

இறுவட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியட்டு வைப்பதையும் கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதையும் விருந்தினர்கள் உரையாற்று வதையும் படங்களில் காணலாம்.




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post