குச்சவெளி பிரதேச மீனவர்கள் 12 ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி பிரதேசத்தில் பருவகால மீன் பிடிக்காக வந்து தங்கி நின்று மீன் பிடியில் ஈடுபடும் வேறு மாவட்ட மீனவர்களின் தொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 12.02.2015 அன்று குச்சவெளி பிரதேச சபைக்கு முன்னால் காலை 10 மணிளவில் திருகோணமலை மற்றும் குச்சவெளி மீனவர் சங்கங்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனர்.

வெளி மாவட்ட மீனவர்களின் தொழில் முறை தமது பாரம்பரிய தொழில் முறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நீண்டகால நோக்கில் இத் தொழிலை நம்பி வாழும் பிரதேச மீனவர்களின் வளங்கள் சுரண்டப்படுவதாகவும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்வாறான எதிர்ப்பை கடந்த காலங்களில் தாம் வெளிப்படுத்தியள்ளோம் ஆயினும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இந்த செயல் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்தது.என தெரிவிக்கும் மீனவர் சங்க பிரதிநிதிகள்  நேற்றைய தினம் 09 ம் திகதி குச்சவெளி விக்னேஸ்வரா மீனவர் சங்கத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட பல மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post