வெள்ளப் பாதுகாப்பு அணை உடைப் பெடுத்ததைத் தொடர்ந்து மூதூர் பிரதேசத்திலுள்ள தாழ்நிலக் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன.
மூதூர் பிரதேசத்திலுள்ள வேதத்தீவு, சாபி நகர்,ஹைரியா நகர் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் உட்புகுந்ததால் மேட்டு நிலப் பகுதிகளை நோக்கி மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு வெள்ளப் பாதுகாப்பு அணையானது 2011 ஆண்டு உடைப்பெடுத்த போது மூதூர் பிரதேசத்தில் பெருமளவான கிராமங்கள் நீரில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அணை உடைப் பெடுத்ததைத் தொடர்ந்து மூதூரில் பெரும் வெள்ளம்
byRajkumar
-
0