சம்பூர் கடற்படை முகாமில் பயிற்சி நிறைவு நிகழ்வுகள்...

திருகோணமலை சம்புர் கடற்படை முகாமிலிருந்து பயிற்சியை நிறைவு செய்த 219 பேர் வெளியேறினர் ஸ்ரீலங்கா கடற்படை பயிற்சியில் 2007ஆம் ஆண்டு இனைந்து கொண்டு பயிற்சியைத் திருப்திகரமாக நிறைவு செய்த 219 கடற்படை அதிகாரிகள் 20ம் திகதி சனிக்கிழமை சம்பூர் கடற்படை முகாம் விதுர தளத்திலிருந்து வெளியேறினர்.இவ்வாறு வெளியேறியவர்களில் 54 பெண் வீராங்கனைகளும் அடங்குகின்றனர். பயிற்சியின் போது திறமைகளை வெளிப்படுத்திய ஐவர் வெற்றிக்கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வில் கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பீ.ஏ.டி.ஆர்.பெரேரா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொன்டதோடு குழுச் செயற்பாடுகளையும் பார்வையிட்டார் பயிற்சியாளர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post