திருகோணமலை வெள்ளை மணல் பிரதேசத்தில் அமையப் பெற்ற 400 வருடங்கள் தொன்மை வாய்ந்த கருமலைஊற்றுப் பள்ளிவாசலில் 19ம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை நடைபெற்றது.
மௌலவி ஹதியத்துள்ளா பிரசங்கத்தை நிகழ்த்தி தொழுகையும் நடாத்தி வைத்தார்.பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் ஜூம்ஆவில் பங்கு பற்றினர். தொழுகையின் பின்னர் மாவட்ட ரீதியில் இப்பள்ளிவாசல் அபிவிருத்தி கட்டுமானம் போன்ற விடயங்களைக் கவனிக்கவென பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.பஸீர் கிண்ணியா நகரசபை தலைவர் டொக்டர் ஹில்மி தலைமையிலான நிருவாக சபையொன்றும் தெரிவு செய்யப்பட்டது.
பள்ளி வாசல் பரிபாலன சபைத் தலைவர் எம்.எச்.கரீம் இப்பள்ளிவாசலை மீட்டுத்தர உதவிய மு.கா.தலைவர் றவுப்ஹக்கீம் பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் பஸீர் .கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஊடகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார். மேலும் தினமும் இரவு 8.மணிவரை மின்சாரம் தருவதாக படை தரப்பினரால் உறுதிமொழி வழங்கப் பட்டுள்ளதாக நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
தொடந்து ஐந்து வேளைத் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டு இங்கு தொழுகையும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் பரிபாலன சபையினர் மேற்கொண்டுள்ளனர்.அத்தோடு கிளப்பன் பேக்,கருமலைஊற்றுக்கடலில் மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பிரதேசத்தை அன்டி வாழும் 500 குடும்பங்கள் மீளக்குடியேறுவதெனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கருமலைஊற்று பள்ளிவாசலில் ஐந்து ஆண்டுகளுக்கு பின் இடம் பெற்ற ஜீம்மா தொழுகை
byRajkumar
-
0