சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசமானது கடந்த சனிக்கிழமை 11.10.2014 அன்று செல்வநாயபுரத்தில் சன சமூக நிலையத்தில் உள்ள மூன்று பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றொர்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலமும் சிறுவர் கலை நிகழ்வும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.இதன் போது இந்நிகழ்வில் கலந்துகொண்ட உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர் வ.கலைச்செல்வம்உரையாற்றுவதையும் கற்றல் உபகரணங்கள் வழங்குவதையும் திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாச தலைவி எமலின் ராகல் மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் உத்தியோகத்தர் வ.ராஜ்குமாா் ஆகியோரை படங்களில் காணலாம்.