திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செலாளர் பிரிவில் உள்ள கோவிலடி குஞ்சப்பன் திடல் மற்றும் நாயன் மார் திடல் பொன்ற பகுதிகளில் அன்று மாலை 3.15 மணியளவில் வீசிய சுழல் காற்றினால் பல வீடுகள் சேதமென தம்பலகாமம் போலிசார் தெரிவிக்கின்றனர்.
சுமார் 15நிமிடங்கள் வீசிய இந்த சுழல் காற்று காரணமாக 08 வீடுகளுக்கு முழுச் சேதமும் 15 வீடுகள் பகுதி சேதமாகியுள்ளது. மேலும் 06 கடைகளும் சேதமாகியுள்ளதுடன் கடையில் விற்பனைக்காக வைக்கப்ட்டிருந்த பொருற்களும் பாதிக்கப்ட்டுள்ளது.
தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா் ஆலயத்தின் பிரதான வீதியில் 1 கீலா மீட்டர் தொலைவு வரையான கட்டிடங்களும் கடைகளும் இவ்வாறு சேதமாகியுள்ளது.
இந்த அனர்த்த சம்பவத்தில் எவ்வித உயிர் சேதமோ காயங்களோ ஏற்பட வில்லை என சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் மாவட்டத் தலைவருமான க.துரைரெட்டணசிங்கம் அவர்கள் தெரிவித்தார்.