திருகோணமலை மின்சார நிலைய வீதியில் புணரமைப்பு செய்யப்பட்டு வந்த வடிகான் பணிகள் கடந்த மூன்று மாத காலமாக நிறைவடையாமையால் உள்ளது.இதனால் அப் பகுதி குடியிருப்பாளர்கள் தமது வீடுகளுக்கு செல்ல இடையூராக இருப்பதுடன் நிறைவடையாத வடிகான்களில் மழை நீர் தேங்கி நின்று நுளம்புகள் பெருகும் அபாயமும் காணப்படுகிறது.ஏற்கனவே திருகோணமலை நகரப்பகுதியில் பல டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.எனவே இவ்வடிகான் பணியை முன்னெடுக்கும் பிரிவினர் உடனயாக பணிகளை நிறைவு செய்து தருமாறு பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.